தமிழகமா? தமிழ்நாடா? – எனக்கு இப்படி சொல்லதான் ஆசை – லோகேஷ் கனகராஜ் பதில்!
கடந்த சில நாட்களாக தமிழ்நாடா தமிழகமா என்ற சர்ச்சை விவாதம் சமூகவலைதளங்களில் நடந்து வருகிறது.
சட்டசபையில் இன்று தமிழ்நாடு என்ற வார்த்தைகளை ஆளுநர் படிக்கவில்லை என அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் கவர்னருக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசியுள்ளார். இதனால் தமிழ்நாடு என்ற வார்த்தையை சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக் ஆக்கி ட்ரண்ட் செய்யப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் “தமிழ்நாடா தமிழகமா” நீங்கள் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்டபோது “எனக்கு தமிழ்நடு என்று அழைக்கதான் ஆசை” எனக் கூறியுள்ளார்.
லோகேஷ் போல பல தமிழ் திரையுலக பிரமுகர்களும் தமிழ்நாடு என்று அழைப்பதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.