ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (10:17 IST)

மரண "துணிவு" இதுதான்... "ரவி"ந்தர் இது தமிழ்நாடு இங்க வந்து உன் வேலையை காட்டாதே!

நடிகர் அஜித் குமார் எச். வினோத் , போனி கபூர் மூவரின் கூட்டணி மீண்டும் இணைந்து உருவாகியிருக்கும் மாஸான படம் துணிவு. இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் திரையரங்குகளில் திருவிழா கொண்டாட்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
படத்திற்கு ஓரளவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக அஜித்தின் நடனம், நடிப்பு, டான்ஸ் உள்ளிட்ட அனைத்தயும் அக்கு வேறு ஆணி வேற ரசித்து ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இப்படத்தில்,  "ரவி"ந்தர் இது தமிழ்நாடு இங்க வந்து உன் வேலையை காட்டாதே" என சமுத்திரகனி பேசும் வசனமொன்று அரசியலில் சாயலில் இருப்பதாக உண்மையிலே துணிச்சலோடு படம் எடுத்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.