செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (15:59 IST)

நானும் லிஸ்ட்ல இருக்கேன் – லிங்குசாமிக்கு சிம்பு தரவேண்டிய ஒரு கோடி !

வேட்டை படத்துக்காக சிம்புவுக்கு கொடுத்த ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸை அவர் இன்னும் திருப்பித் தரவில்லை என லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

நடிகர் லிங்குசாமி ஒரு காலத்தில் பிஸியான இயக்குனராகவும் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் அஞ்சான், உத்தம வில்லன் ஆகிய படங்களின் தோல்வியின் காரணமாக அவரது தயாரிப்பு நிறுவனம் தற்போது முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் தன் தயாரிப்பில் உருவாக இருந்த வேட்டை படத்துக்காக சிம்புவுக்கு ஒரு கோடி அட்வான்ஸ் கொடுத்ததாகவும், ஆனால் அந்த படத்தில் நடிக்காத சிம்பு பணத்தை இன்னும் திருப்பித் தரவில்லை என்றும் சமீபத்தில அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் பி எல் தேனப்பன், மைக்கேல் ராயப்பன், சுரேஷ் காமாட்சி ஆகியோரை அடுத்து சிம்புவின் மீது மற்றொரு தயாரிப்பாளர் புகார் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.