வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது - முன்னணி நடிகை
கொரோனா பரவல் இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்நிலையில், நடிகை நித்யாமேனன் கொரோனாவால் வாழ்க்கை போராட்டம் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக அனைவராலும் பாராட்டப்படுபவர் நடிகை நித்யாமேனன். இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் தி அயர்ன் லேடி என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் இவர் கொரோனா குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது :
கொரோனாவால் மக்களின் வாழ்க்கை போராட்டமாகிவிட்டது. பல மக்கள் உணவுக்கு வழியின்றி போராட வைத்துள்ளது. பல மக்களை ஏழையில்லாத நிலைக்கு தள்ளியுள்ளது. இப்படி எல்லோரும் கொரோனா காலத்தில் போராடி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.