பிக் பாஸ் 3 - ல் மூன்றாம் பாலினத்தவர்கள் (LGBTQ) - கமல் கொடுத்த கிரேட் ஐடியா !

Last Updated: வெள்ளி, 24 மே 2019 (12:43 IST)
பிக்பாஸ் சீசன் 3 மெகா ஹிட் அடிக்க கமல் ஹாசன் புது ஐடியா கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 
 
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். மேலும் மக்களின் மனதை எளிதாக வெல்லமும் இந்த நிகழ்ச்சி பிரபலங்களுக்கு, ஒரு பாலமாக அமைகிறது. இதன் காரணமாகேவே திரையுலகில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நடிகர், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக  ஆர்வம் காட்டுகிறார்கள்.
 
கடந்த 2017 ஆம் ஆண்டு, துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக புதுப்பரிணாமத்தில் தொகுப்பாளராக அறிமுகமானவர் உலகநாயகன் கமல்ஹாசன். முதல் சீசனில் தொகுப்பாளராக பட்டையைக் கிளப்பினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் இவரே தொகுப்பாளராக இருந்தார். என்ன தான் முதல் சீசனை போன்று  2 வது சீசன் இல்லையென்றாலும்  கமல்ஹாசன் வரும் இரண்டு நாட்களில் மட்டும் அனைவரையும் டிவி முன்பு அமரவைத்து.
 
இந்நிலையில் தற்போது முன்றாவது  சீசனுக்கான வேலைகள் படுமும்முரமாகி வருகிறது. மேலும் இதில் பங்குபெறப்போகும் போட்டியாளர்கள் பற்றி  தான் சமூகவலைத்தளத்தில் முழுக்க பேசப்பட்டு வருகிறது. அதில் நடிகை சாந்தினி, ரமேஷ் திலக், மதுமிதா என பல திரைபிரபலங்கள்  கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும் சம்மந்தப்பட்டவர்கள் மறுத்து வந்தனர். 
 
இந்நிலையில்  தற்போது இந்த நிகழ்ச்சி மெகா ஹிட் அடிக்க தொகுப்பாளரான கமல் ஹாசன் ஒரு புது வித ஐடியா ஒன்றை கொடுத்துள்ளாராம். 15 பிரபலங்கள் கலந்துகொள்ளும் இதில் மூன்றாம் பாலினத்தவர்களில் (LGBTQ) இருந்து நிச்சயம் ஒருவரை பங்கேற்க வைக்கவுள்ளனர். அந்தவகையில் பாடகி சாக்க்ஷி , தர்மதுரை ஜீவா, அருவி அஞ்சலி , நடிகை கல்கி என இவர்களில் யாரேனும் பங்குபெற வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.


 
இதே பார்முலாவை இந்தி , மலையாளம் , கன்னடா என மற்ற மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் அரங்கேற்றம் செய்து நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடைய செய்திருக்கிறார்கள் என்பதால் கமல் இந்த ஐடியாவை கொடுத்துள்ளாராம்.


இதில் மேலும் படிக்கவும் :