பிக் பாஸ் கமல் ஹாசனுக்கு போட்டியாக களமிறங்கிய கணேஷ் வெங்கட்ராம்!

Last Modified திங்கள், 20 மே 2019 (14:36 IST)
நடிகர் கமல் ஹாசனுக்கு  போட்டியாக கணேஷ் வெங்கட்ராம் களத்தில் இறங்கியுள்ளார். 
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசன் விரைவில் ஒளிபரப்படவுள்ளது. 
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்றே ஜெயா தொலைக்காட்சியில் ‘ஆக்ஷன் சூப்பர் ஸ்டார்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 12 பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி போட்டியிடவுள்ளனர். இந்த நிகழ்ச்சியை  பிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராமன் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். 
 
மே 26ம் தேதி துவங்கவுள்ள இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கணேஷ். இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள கமலுக்கு போட்டியாக களமிறங்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :