பிக் பாஸ் 3 சீசனில் கலந்துகொள்ளப்போகும் "தேன்அடை" !

Last Updated: திங்கள், 20 மே 2019 (17:45 IST)
பிக்பாஸ் 3 சீசனில் கலந்துகொள்ளும் திரைபிரபலத்தை குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்றது. 
 
ரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது  சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளது. இதனை சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக  வெளியிட்டது.மேலும் அந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் ஸ்டைலாக தோன்றினார்.
 
இதற்கு முன்னதாக இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ரமேஷ் திலக், சுதா சந்திரன், லைலா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அதை மூவருமே மறுத்தனர். அதேவேளையில் நடிகை சாந்தினி தமிழரசன் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் தற்போது ஒரு கல் ஒரு கண்ணாடி, டிமான்டிக்காலனி ஆகிய படங்களில் நடித்த நடிகை மதுமிதா பிக் பாஸ் 3 சீசனில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகிது. மேலும் பிக்பாஸ் டீமில் இருந்து அவரை அனுகியதாகவும் அதன் காரணமாக அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :