ஆஸ்கர் லிஸ்டில் தமிழ்நாட்டு சிறுமியை பற்றிய ஆவணப்படம் “கமலி”
கமலி என்ற 10 வயது பெண்ணின் சறுக்கு விளையாட்டு பற்றிய ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் அருகே உள்ள மீனவ குப்பத்தை சேர்ந்த மூர்த்தி மற்றும் சுகந்தி தம்பதியினரின் மகள் “கமலி”. சிறு வயதிலிருந்தே ஸ்கேட் போர்ட் எனப்படும் சறுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதியினர் சிலர் கடற்கரை அருகே சிமெண்டினாலான சறுக்கு விளையாட்டு தளத்தை அமைத்து கொடுத்தனர்.
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள் கமலி ஸ்கேட் போர்டில் சறுக்குவதை மிகவும் ஆர்வமாக பார்த்து சென்றனர். சிலர் அதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட அது வைரலானது. இந்நிலையில் மாமல்லபுரம் வந்த நியூஸிலாந்தை சேர்ந்த ஷாசா ரெயின்போ என்ற பெண் கமலியின் இந்த திறமையை, அவர் வாழ்க்கையை அரைமணி நேர ஆவணப்படமாக தயார் செய்து திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருக்கிறார். அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த டாக்குமெண்டரிக்கான விருது, மும்பை திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது போன்றவற்றை வென்ற இந்த டாக்குமெண்ட்ரி, தற்போது ஆஸ்கர் விருதுக்கான லிஸ்டில் இடம் பெற்றிருக்கிறது. இந்த டாக்குமெண்ட்ரியின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி பரவலான பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ட்ரெய்லரை கீழே காணலாம்..