லியோ 2 வில் கமல்ஹாசன் இணைகிறாரா? தீயாய் பரவும் தகவல்!
லியோ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்போது திடீரென லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
ஆனால் இதுபற்றி திரைத்துறை சேர்ந்த பிரபலங்கள் தெரிவிக்கும் செய்தி வேறு விதமாக உள்ளது. லியோ படத்தை இதுவரை ஒருபாகமாக மட்டுமே உருவாக்கி வருகிறார்களாம். ஆனால் இரண்டாம் பாகத்துக்கான லீட் கிளைமேக்ஸுக்கு பிறகு இடம்பெறும் எனவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை படம் அதிரி புதிரி ஹிட்டானால் பிறகு இரண்டாவது பார்ட் உருவாக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஒருவேளை லியோ 2 படம் உருவானால் அதில் கமல்ஹாசன் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும், அந்த படத்தை கமல்ஹாசனே தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.