செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (08:08 IST)

இது என்ன எனக்கு ஃபர்ஸ்ட் ப்ளாப்பா? நம்பிக்கையோடு பேசிய விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் ரிலீஸூக்குப் பிறகு படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதனால் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்குமளவுக்கு விவகாரம் முற்றியது.

இதையடுத்து விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்னாத் கூட்டணியில் உருவாக இருந்த JGM என்ற படம் கைவிடப்பட்டது. இதையடுத்து இப்போது விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக குஷி உருவாகி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸானது.

அந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர் ‘லைகர் ஒன்றும் என்னுடைய முதல் தோல்வி படம் இல்லை. ஒரு படம் சரியாக போகவில்லை என்றால் அது நம்மை காயப்படுத்தும்.  நான் நிறைய தோல்விகளைக் கொடுத்துள்ளேன். அதுபோல நிறைய வெற்றிகளையும் கொடுத்துள்ளேன். நான் தோல்விகளைப் பார்த்து பயப்படும் ஆளில்லை” எனக் கூறியுள்ளார்.