1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (12:53 IST)

தளபதி 68 படத்தின் முதல் அப்டேட் கொடுத்த கங்கை அமரன்!

விஜய்  லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். இந்நிலையில் முதல் முறையாக படத்தைப் பற்றிய அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

ஒரு நேர்காணலின் போது அவர் “படத்தில் 3 அல்லது நான்கு பாடல்கள் இருக்கும். படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கும். நீங்கள் எதிர்பார்க்காத நடிகர்கள் எல்லோரும் இருப்பார்கள்” எனக் கூறி விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தூபம் போட்டுள்ளார்.