1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (15:02 IST)

அமீர்கான் உறவினரை திருமணம் செய்யும் லேகா வாஷிங்டன்!

சிம்பு நடித்த கெட்டவன் படத்தில் லேகா வாஷிங்டன்  கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் லேகா வாஷிங்டன். இந்த படம் எதிர்பாராத சில காரணங்களால் பாதியில் கைவிடப்பட்டது. அதன் பின்னர் லேகா வாஷிங்டன் ஜெயம் கொண்டான், மற்றும் கல்யாண சமையல் சாதம் ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் அவர் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் அவர் பாலிவுட் நடிகர் இர்பான் கானை காதலிப்பதாக சொல்லப்பட்டது. இதை இர்பான் கானும் உறுதி செய்துள்ளார். அதில் “என்னுடைய மோசமான நாட்களில் என் கூட இருந்து எனக்கு ஆன்மபலமாக இருந்தவர் லேகா வாஷிங்டன். அவர் இல்லாமல் என்னுடைய வாழ்க்கையை தொடர முடியுமா என்பது சந்தேகம்தான்” எனக் கூறியுள்ளார்.

இதனால் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இர்பான் கான், நடிகர் அமீர்கானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.