1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (14:45 IST)

மலையாள சினிமாவில் இயக்குனராக கால்பதிக்கும் கௌதம் மேனன்… ஹீரோ இவர்தான்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. கடைசியாக அவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் சிக்கலில் மாட்டித் தவிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அதற்குக் காரணம் அவரின் கடன் தொல்லைகள்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் இயக்குனராகக் கால்பதிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை அவர் விரைவில் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவர் மம்மூட்டியோடு இணைந்து ஒரு படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.