பிரபலமாக வேண்டுமென்றால், உங்கள் மீது ஏன் குற்றம் சாட்டவேண்டும் –லீனா மணிமேகலை பாய்ச்சல்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் பொய் என்றும் பிரபலமாவதற்காக லீனா மணிமேகலை பொய் சொல்கிறார் என்றும் கூறிய இயக்குனர் சுசி கணேசனுக்கு லீனா மணிமேகலை பதிலடி கொடுத்துள்ளார்.
மீ டூ விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. பாலிவுட்டில் நானா பாடேகர் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிக்கியுள்ளனர். அதேபோல், கோலிவுட்டில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகாரை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த பல பெண்களும், தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கவிஞரும், ஆவணப்பட இயக்குனருமான லீனா மணிமேகலை, திருட்டுப்பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் புகாரை கூறியுள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டே தான் அனுபவித்த பாலியல் தொல்லையைப் பெயர் குறிப்பிடாமல் அவர் பதிவு செய்துள்ளார். அதை தற்போது டிவிட்டர் பக்கத்தில் சுசிகணேசனின் பெயரைக் குறிப்பிட்டு மீ டூ ஹேஷ்டேக்குடன் பதிவு செய்தார். இது சம்மந்தமாக நேற்று பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து நடந்த சம்பவம் குறித்த விளக்கம் அளித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சுசி கணேசன் லீனா கூறுவது பொய் என்றும் அவர் பிரபலமாவதற்காக என் மீது பழிபோடுகிறார் என்றும் அவர் மீது மானநஷ்ட வழக்குப் போடப்போவதாகவும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறினார். அதற்குத் தனது முகநூல் பக்கத்தில் லீனா மணிமேகலை தற்போது பதிலளித்துள்ளார். அதில் ‘சுசிகணேசன்சொல்வதுபோலபொய்யாககுற்றச்சாட்டுசொல்லிஇன்னும்பிரபலமாகவேண்டும்என்பதுதான்என்நோக்கம்எனறால், ஹேண்ட்சம்மாக, எனக்கு heavy crush இருக்கிற, நான்விரும்பும்சினிமாஎடுக்கும், நன்குஅறியப்பட்ட, சர்வதேசஅளவில்புகழ்பெற்றஇயக்குநர்ஒருவரைதேர்ந்தெடுத்துசொல்லியிருப்பேன். நிச்சயமாகஇதில்எந்தலட்சணமும்சுசிகணேசனுக்குஇல்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.