மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை !
நடிகர் சிம்பு- ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மகா படத்திற்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர் ஹன்சிகா. இவரது 50 வது படம் மஹா. இப்படத்தில் இவருடன் இணைந்து சிம்பு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ள நிலையில் வரும் ஜூலை 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், மஹா படத்திற்குப் பிறகு, நடிகர் சிம்புவுடன் இணைந்து ஹன்சிகா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.