என் மருமகன்களில் ஒருவர் அந்த சாதி... விமர்சித்த ஆசாமிக்கு பதிலடி!
லட்சுமி ராமகிருஷ்ணன் திரைப்பட நடிகையும், இயக்குநர் என பல துறைகளில் கலக்கி வருபவர். மலையாளத்தில் அறிமுகமான இவர் தமிழில் துணைப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் பிரபல தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி பெரும் பேமஸ் ஆனவர்.
அந்நிகழ்ச்சியில் தவறுகளை தட்டிக்கேட்டு தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை தைரியமாக சொல்லக்கூடியவர். பல விஷயங்களில் அப்படி பேசி ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார். விமர்சனங்கள் பல வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் லட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில், " தன் அபார்ட்மென்ட் கம்யூனிட்டியில் வசிக்கும் ஒருவரின் நண்பர் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு A+ ரத்த வகையை சேர்ந்த யாராவது பிளாஸ்மா தானம் செய்ய முடியுமா? என கேட்க அதற்கு ட்விட்டர் வாசி ஒருவர், இதில் கூட ஜாதியா என கமெண்ட் செய்து விமர்சித்தார்.
பின்னர் லட்சுமி, நான் இங்கு ஜாதி பற்றி பேசவில்லை, கேட்டட் கம்யூனிட்டியை பற்றி சொன்னேன் என்றார். சரி.. ஜாதி பற்றி பேசலனா ஏன் பிராமின் பையனுக்கு பொண்ணு கொடுத்திருக்கீங்க என வம்பிழுத்தார். இதனால் கடுப்பான லட்சுமி, தங்கள் துணையை அவர்களே தேர்வு செய்தார்கள், நாங்கள் இல்லை. மேலும், என் மருமகன்களில் ஒருவர் ஐயர் இல்லை. இத விட்டால் உங்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையா என காட்டமாக பதிலளித்தார்.