வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (07:30 IST)

16 ஆண்டு இடைவெளிக்குப் பின் கார்த்தியின் சர்தாரில் ரி எண்ட்ரி… யார் அந்த நடிகை?

நடிகை லைலா பல ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில் இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

கார்த்தி நடித்த சுல்தான் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படங்கள் எல்லாம் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விதமாக உள்ளன. பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார், முத்தையா இயக்கத்தில் விருமன் மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் என நடித்து வருகிறார். இதில் சர்தார் தவிர்த்து மற்ற இரு படங்களின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

இப்போது சர்தார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கதாநாயகியாக வலம் வந்த லைலா 16 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறாராம்.