பாஜகவில் இணையவுள்ள லேடி சூப்பர் ஸ்டார்....
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் விஜயசாந்தி. தலைவாசம் என்ற படத்தில் அறிமுகமான அவர் பிரபல சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்தும், அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்தும் அவர் புகழ்பெற்றார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவிலிருந்து விலகி அவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் சார்பில் போட்டியிட்டு, 2009 ஆம் ஆண்டு மெதக் தொகுதிய்ல்ப் போட்டியியிட்டு எம்பியானார்.
பின்னர், தெலுங்கானா மாநிலம் தனியாக உருவான பிறகு அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் அவருக்கு அதிருப்தி நிலவுவதாகவும் அதனால் அக்கட்யிலிருந்து விலகி அவர் பாஜகவில் இணைவுள்ளதாகத்தகவல்கள் வெளியாகிறது.
அவர் நீண்டகாலம் கழித்து சினிமாவில் சூப்பர் ஸ்டாருடன் நடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது