விநாயகர் சதுர்த்தியில் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு செம ட்ரீட்: பரபரப்பு தகவல்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'லாபம்'. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக முதன் முதலாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய ஏ ஜெகநாதன் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இது ஒரு விவசாய சம்பந்தபட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது
விவசாயிகளுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையிலுள்ள தரகர்கள் எவ்வாறு லாபம் பார்க்கிறார்கள் என்பதும் விவசாயிகளின் உழைப்பை அவர்கள் எப்படி சுரண்டுகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதையாம். இந்த படத்தின் டிரைலர் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளதால் விஜய் சேதுபதி ரசிகர்கள் குஷியில் உள்ளனர். மேலும் இந்த படத்தின் டிரைலரை மிகப்பெரிய ஆவலுடன் அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே திரையுலகில் உள்ள சிலர் இந்த படத்தின் டிரைலரை பார்த்து விட்டு மிகப்பெரிய அளவில் பாராட்டி வருவதாகவும் இந்த படம் தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது