பாக்ஸ் ஆபிஸில் ஈயாடிய குட்டி ஸ்டோரி… இவ்வளவுதான் வசூலா?
கடந்த வாரம் வெளியான குட்டி ஸ்டோரி படத்தினை எதிர்பார்த்து போன ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாம்.
தமிழ் சினிமாவில் ரொமான்டிக் படங்களுக்கு போன இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இந்த ஊரடங்கு நேரத்தில் குறும்படம், ஆல்பம் சாங் உள்ளட்டவற்றை இயக்கினார். தற்போது நடிகர் விஜய் சேதுபதியை வைத்து குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி என்ற படத்தை விஜய், வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி உள்ளிட்ட இணைந்து இயக்கியுள்ளார்.
இந்த படம் முதலில் ஓடிடி தளங்களுக்காக எடுக்கப்பட்டது. ஆனால் பின்னர் திரையரங்குகளில் வெளியிடலாம் என்ற முடிவால் நேற்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் நலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் அதிதி பாலன் ஆகியோர் நடித்த ஹலோ ஹலோ திரைப்படம் மட்டுமே ஓரளவுக்குப் பார்க்கும்படி உள்ளதாகவும் மற்ற படங்கள் எல்லாம் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் வெளியாகி 5 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் இந்த படம் தமிழகம் முழுவதும் திரையரங்கின் மூலமாக 10 லட்சம் ரூபாய் கூட வசூல் செய்யவில்லையாம். இதனால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் அதிருப்தியில் உள்ளனராம்.