1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (07:31 IST)

காஜல் அகர்வாலின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?

பிரபல நடிகை காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்த லைவ் டெலிகாஸ்ட் என்ற ஓடிடி தொடர் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த திகில் கதையம்சம் கொண்ட தொடருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வெளியான இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த வித வரவேற்பும் இல்லாமல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஹாட்ஸ்டாரில் வெளியான வெப் தொடர்கள் மற்றும் ஆந்தாலஜி திரைப்படங்களில் லைவ் டெலிகாஸ்ட் திரைப்படம் தான் மிகக் குறைந்த பார்வையாளர்களை பெற்று உள்ளதாக புள்ளி விவரம் கணக்கு ஒன்று தெரிவித்துள்ளது 
 
காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, வெங்கட் பிரபு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இணைந்தும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாதது படக்குழுவினர்களுக்கு மட்டும் என்று ஹாட் ஸ்டாருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
திரைப்படங்களை நன்றாக இயக்கும் இயக்குனர்கள் ஆந்தாலஜி மற்றும் ஓடிடிக்காக இயக்கும் திரைப்படங்களை ஏனோ தானோ என்று இயக்குவதாக எழுந்து வரும் குற்றச்சாட்டு உண்மையோ என்ற கருத்தை இந்த தொடரின் தோல்வி ஏற்படுத்தியுள்ளது.