வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2019 (16:29 IST)

கவின், லொஸ்லியாவின் லீலைகளை குறும்படம் போட்டு காட்டிய கமல்?

கவின் - லொஸ்லியாவின் அலப்பறையை போட்டு காண்பித்து காதலுக்கு செக் பாய்ண்ட் வைத்துள்ளார் கமல். 


 
இன்று வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் லக்ஜரி பட்ஜெட் குறைத்ததற்கான காரணத்தை தெளிவுப்படுத்தும் விதத்தில் ஒரு விளக்கப்படத்தை போட்டு காண்பிக்கிறார் கமல். இந்த வீடியோவில் லொஸ்லியா, கவின் இரவு நேரங்ககளில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை திரையிட்டு காண்பிக்கின்றனர். 
 
பிக்பாஸ் ரூல்ஸ் படி சரியான நேரத்தில் தூங்கவேண்டும். இரவு நேரங்களில் தேவையில்லாமல் பேசிக்கொண்டிருக்கக்கூடாது என்பது தான். ஆனால் அதையும் மீறி லொஸ்லியாவும் கவினும் பேசிக்கொண்டிருந்ததால் தான் லக்ஜரி பட்ஜட் குறைந்துள்ளதாக கமல் விளக்குகிறார். இந்த விடியோவை பார்த்த உடனே வனிதாவும் ஷெரினும் ஷாக்காகி விட்டனர். லொஸ்லியா கவின் முகத்தில் ஈ ஆடவில்லை.