ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (01:20 IST)

விஜய் வில்லன் நடிகருக்கு கிடைத்த பிக்பாஸ் சான்ஸ்

ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட தமிழ் பிக்பாஸ் கோமா நிலைக்கு சென்றுவிட்ட நிலையில் புத்துணர்ச்சியுடன் அடுத்த பாகத்தை ஆரம்பிக்கவுள்ளது கன்னட பிக்பாஸ்



 
 
நான்கு பாகங்கள் முடிந்து ஐந்தாம் பாகத்தை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்கவுள்ளனர். ஏற்கனவே முதலாம் மற்றும் நான்காம் பாக கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப், தற்போது இந்த ஐந்தாம் பாகத்தை தொகுத்து வழங்கவுள்ளார். இவர் விஜய் நடித்த புலி படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கமல்ஹாசனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும், அதை கன்னடத்தில் பயன்படுத்தவுள்ளதாகவும் சுதீப் கூறியுள்ளார். இந்த முறை கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல அதிரடி விஐபிக்கள் களமிறங்கவுள்ளார்களாம்