திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (22:19 IST)

'ஆர்த்தி-ஜூலி வருகையில் திடீர் திருப்பம். ரசிகர்கள் மகிழ்ச்சி

பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் தான் லட்சக்கணக்கானோர் ஜூலிக்கு எதிராக வாக்குகள் பதிவு செய்து வீட்டை விட்டு வெளியேற்றினர். ஆனால் மக்களின் கருத்துக்கு மதிப்பு கொடுக்காமல் மீண்டும் ஜூலியை பிக்பாஸ் வீட்டில் அனுமதித்த விஜய் டிவி நிர்வாகிகளை பார்வையாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.



 
 
இந்த நிலையில் இன்று ஆர்த்தி மற்றும் ஜூலி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். ஆனால் இருவரும் ஒருவாரம் விருந்தினர்களாக மட்டுமே தங்கியிருப்பார்கள் என்றும் இருவரும் அடுத்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்றும் இன்று தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட பின்னர்தான் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்ததோடு மகிழ்ச்சியும் அடைந்தனர்.
 
இந்த நிலையில் வீட்டிற்குள் வந்தவுடன் ஜூலி தனது வழக்கமான பொய்யை ஆரம்பித்துவிட்டார். இவரெல்லாம் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்த மாட்டார் என்று டுவிட்டரில் கமெண்ட்டுக்கள் குவிந்து வருகிறது.