திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (22:45 IST)

சினேகன், ஆரவ், காஜல்: இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் வீட்டில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நிலையில் இந்த வாரம் வெளியேறுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று நடந்த எவிக்சன் நாமினேஷனில் சினேகன், காஜல் மற்றும் ஆரவ் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.



 
 
இவர்கள் மூவரில் ஒருவர் இந்த வாரம் சனி அல்லது ஞாயிறு அன்று வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுவார்கள். அனேகமாக காஜல் அல்லது ஆரவ் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 
 
பிக்பாஸ் வீட்டில் வந்ததில் இருந்தே எந்தவித சுவாரஸ்யத்தையும் கொடுக்க முடியாத காஜல் இந்த வீட்டில் இருக்க தகுதியற்றவர் என்று சக பங்கேற்பாளர்களே கூறி வருகின்றனர். மேலும் கமல் காட்டிய குறும்படத்திற்கு பின்னர் ஆரவ்வின் இமேஜ் போதுமான அளவில் டேமேஜ் ஆகியுள்ளது. அவர் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் சினேகன் மன்னிக்க தயாராக இல்லை என்பது அவரது முகத்தில் இருந்து தெரிகிறது. இந்த பரிதாபம் சினேகனை காப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.