நியுசிலாந்தில் ஷங்கரின் RC 15 படக்குழு… கியாரா அத்வானி வெளியிட்ட போட்டோ!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்போது இந்தியன் 2 மற்றும் RC 15 படங்களின் படப்பிடிப்பை ஒரே நேரத்தில் நடத்தி வருகிறார் ஷங்கர். இந்நிலையில் இப்போது RC15 படத்துக்காக நியுசிலாந்தில் ஒரு பாடலைப் படமாக்க ஷங்கர் தனது குழுவினரோடு முகாமிட்டுள்ளார். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை கியாரா அத்வானி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.