கேஜிஎப் 2 க்காக வெயிட்டிங்கா?… அதுக்கு முன்பு தியேட்டரில் வெளியாகும் KGF chapter 1
கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் முதல் பாகம் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.
இந்நிலையில் கேஜிஎப் 2 வெளியாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக இந்த படத்தின் முதல் பாகத்தை சில திரையரங்குகள் வெளியிடுகின்றன. இதன் மூலம் கேஜிஎப் 2 படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகமாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.