திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (10:36 IST)

முதல் முதலாக கிரீஸ் நாட்டில் வெளியாகும் தென்னிந்திய படம்…. கேஜிஎப்2 சாதனை!

யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎப் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இதுவரை தென்னிந்திய படங்கள் எதுவும் ரிலீஸாகாத கிரீஸ் நாட்டில் முதன் முதலாக கேஜிஎப் 2 ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.