ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (23:52 IST)

கேஜிஎப் சேப்டர் - 2 பட ரிலீஸ் அன்று விடுமுறை வேண்டும்...பிரதமர் மோடிக்கு ரசிகர்கள் கடிதம்

கேஜிஎப் சேப்டர் - 2 படம் வரும் 2021 ஜூலை 16 ஆம் தேதி ரிலீஸாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ள நிலையில், தற்போது கேஜிஎப் சேப்டர் - 2 பட ஹீரோ யாஷின் ரசிகர்கள் இப்படம் ரிலீஸாகும் நாளன்று தேசிய விடுமுறை விடவேண்டுமென டுவிட்டரில் பதிவிட்டு பிரதமர் மோடிக்கு டேக் செய்துள்ளனர்.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2

தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்பது படக்குழு இன்று மாலை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தது.

அதன்படி சமீபத்தில் கேஜிஎப் சேப்டர் - 2  படக்குழு டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

உலக சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கேஜிஎப் சேப்டர் - 2 படம் வரும் ஜூலை மாதம் 16 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இப்படம் குறித்து மீம்ஸ்கள் இணையதளத்தைக் கலக்கி வருகின்றன.

ராக் ஸ்டார் மற்றும் ராக்கிபாயின் ரசிகர்கள் கேஜிஎப்-2 என்று ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து சமூகவலைதளத்தை தங்கள் வசமாக்கினர்.

இந்நிலையில் ராக் ஸ்டார் யாஷின் ரசிகர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு டுவீட் பதிவிட்டுள்ளனர்.

அதில், யாஷின் ரசிகர்களான நாங்கள் அவர் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎஃப் சேப்டர் -2 படத்தைக் காண ஆர்வமுடன் உள்ளோம். எனவே வரும் ஜுலை மாதம் 17 ஆம் தேதியை எல்லொரும் எதிர்நோக்கியுள்ளனர். அதனால் அந்நாளை தேசிய விடுமுறைதினமாக அனுசரிக்க வேண்டுமென  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இது சினிமா படத்திற்கு அல்ல..எங்களின் உணர்வுகள் எனத் தெரிவித்து இப்படிக்கு ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.