தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,767,206 என அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 154,522 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 10,447,450 ஆகவுள்ளதாக இன்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:
தமிழகத்தில் இன்று மேலும் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாகக் கொரோனா பாதிப்பு 8,39,352 பேராக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 521 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,22,468 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவால் 47 பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 12,367 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று கொரொனாவால் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,31,563 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தற்போது, தமிழகத்தில் 4,517 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகக்து.