கேஜி.எஃப் -2 திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…ரசிகர்கள் கொண்டாட்டம் !
கேஜிஎப் 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பதை இன்று மாலை படக்குழு அறிவிக்க உள்ளதாக இன்று அனைத்து தகவல் வெளியான நிலையில் தற்போது ஜூலை 16 ஆம் தேதி ரிலீஸாகும் எனத் தெரிவித்துள்ளது.
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.
இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2
தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்பது படக்குழு இன்று மாலை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தது.
அதன்படி தற்போது கேஜிஎப் படக்குழு டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
உலக சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கே.ஜிஎப் படம் வரும் ஜூலை மாதம் 16 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இப்படம் குறித்து மீம்ஸ்கள் இணையதளத்தைக் கலக்கி வருகின்றன.
ராக் ஸ்டார் மற்றும் ராக்கிபாயின் ரசிகர்கள் கேஜிஎப்-2 என்று ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.