மலையாள படங்களை திரையிட மாட்டோம்… கேரள திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பு!
இந்திய சினிமாவில் மிகவும ஆரோக்யமாக இருக்கும் திரைத்துறைகளில் மலையாள சினிமா முன்னணியில் உள்ளது. அங்கு வணிகப படங்களும், கலைப்படங்களும் சம அளவில் வெளியாகி ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. மாஸ் ஹீரோக்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டி போன்றவர்கள் கூட நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடி நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்போது மலையாள சினிமாவில் ஒரு புதுப் பிரச்சனை எழுந்துள்ளது. மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் திரைப்படங்கள் வெளியாகி 42 நாட்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியாக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதை மீறி படங்கள் ஓடிடியில் முன்னதாகவே வெளியாவதால் இப்போது மலையாள படங்களை வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் திரையிட மாட்டோம் என கேரள திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.