வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (07:14 IST)

ஆஸ்தான இசையமைப்பாளரை மாற்றிய லெஜண்ட் சரவணன்… இதுதான் காரணமா?

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த சில மாதங்களாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி வரவேற்பையும் கேலி கிண்டலையும் பெற்றது. இந்நிலையில் இப்போது தன்னுடைய க்ளின் ஷேவ் கெட்டப்பை மாற்றி தாடி மீசையுடன் அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார் சரவணன்.

இந்நிலையில் அவர் தன்னுடைய அடுத்தப் படத்துக்காக பல கதைகளைக் கேட்டுவருவதாக சொல்லப்பட்டது. இயக்குனர் துரை செந்தில்குமார் சொன்ன கதைக்கு சம்மதம் சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது சூரியை வைத்து கருடன் என்ற படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார் அந்த படத்தை முடித்த பின்னர் லெஜண்ட் சரவணன் படத்தை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சரவணனின் முதல் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். ஆனால் இரண்டாவது படத்துக்கு ஜிப்ரானை இசையமைக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை வழங்குவதற்கு தாமதம் ஆக்குவதால் ஜிப்ரானிடம் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.