வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (11:14 IST)

காதல் கிசுகிசு உண்மை தான்... கீர்த்தி சுரேஷின் கையில் விஜய் பெயர் - வைரல் புகைப்படம்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள்.
 
தொடர்ந்து இந்தி, தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். இதனிடையே கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யை காதலித்து வருவதாகவும் அதனால் அவரது மனைவி சங்கீதாவை விவகாரத்து செய்யப்போவதாகவும் வதந்திகள் வெளியானது. 
 
இந்நிலையில் தற்போது அதை நிரூபிக்கும் வையில் கீர்த்தி சுரேஷ் கையில் "V"என்ற லெட்டர் வைத்திருக்கும் போட்டோ ஒன்றை இணையத்தில் வைரலாகிவிட்டது. விஜய் பெயரை தான் கீர்த்தி சுரேஷ் கையில் பச்சை குத்தி இருப்பதாகவும் ஒரு வேலை காதல் கிசுகிசு உண்மையாக இருக்குமோ என பெரு குழப்பம் நிலவி வருகிறது. ஆனால் கீர்த்தி சுரேஷ் தசரா படத்தில் நடித்த வெண்ணிலா என்ற கேரக்டர் எழுத்தை தான் "V"என வைத்திருக்குறார்.