புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (17:47 IST)

நயன்தாரா, டாப்ஸிக்கு போட்டியாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்! மாஸ் டைட்டில் இதோ!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். 


 
விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் .
 
ஆனால், கீர்த்தி தரமான கதாபாத்திரங்ககளை மட்டுமே தேர்வு செய்து வருகிறாராம். அதிலும் கதாநாயகிக்கு முக்கியவத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடிக்கவிருப்பதாகவும் முடிவெடுத்துள்ளாராம். 
 
அந்தவகையில் தற்போது தெலுங்கில் அறிமுக இயக்குனர் நரேந்திரா நாத் இயக்கும் புது படத்தில் நடிக்கவுள்ளராம். ஹீரோயினை மையப்படுத்திய உருவாகவுள்ள இப்படத்திற்கு "மிஸ் இந்தியா" என்ற டைட்டில் வைத்துள்ளனர். எனவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இப்படத்தின் மூலம் நயன்தாரா, டாப்ஸி போன்ற நடிகைகளை போன்றே கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் கீர்த்தி நடிக்கவிருப்பதால் அவர்களுக்கு போட்டியாக வெற்றி கொடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.