கஸ்தூரிக்கு கொடுக்கப்பட்ட ஸ்பெஷல் பவர் - டம்மியான ஹவுஸ்மேட்ஸ்!

Last Updated: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (16:00 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்பட்டுள்ளது. 


 
வைல்ட் கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ள கஸ்தூரி நிச்சயம் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக எடுத்து செல்வார் என மக்களால் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் பிக்பாஸும் தற்போது கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர் கொடுத்து அவர் செய்ய சொல்வதெல்லாம் மற்ற ஹவுஸ்மேட்ஸ் செய்யவேண்டுமென கட்டளையிடுகின்றனர். 
 
பின்னர் கஸ்தூரி, மதுமிதாவை தர்ஷனுக்கு குடை பிடிக்கச்சொல்லியும் , ஷெரினை தோப்பு கர்ணம் போட சொல்லியும், சாக்ஷியை பத்ரூமில் தலைகீழாக நிற்கச்சொல்லியும் ஆர்டர் போட...உடனே அவரவர்கள் அதனை செய்கின்றனர்.
 
இது முதல் நாள் என்பதால் கஸ்தூரி சொல்வதையெல்லாம் மண்டை ஆட்டிக்கொண்டு செய்கிறார்கள். இன்னும் போக போக என்ன நடக்க போகுதுன்னு பாருங்க என நெட்டிசன்ஸ் பலரும் பார்வையாளர்களை உஷார் படுத்தி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :