வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (16:47 IST)

அக்னி நட்சத்திரம்’ ருத்ராவாக மாறும் நடிகை கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் உள்ளார் என்பதும் கடந்த சில வருடங்களாக அவர் சமூக கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தைரியமாக சொல்லி வருகிறார் என்பதும் தெரிந்ததே 
 
பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட கஸ்தூரி விரைவில் அரசியலில் குதிப்பார் என்றும் முக்கிய கட்சி ஒன்றில் அவர் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் முதல் முதலாக அவர் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்க உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் அக்னி நட்சத்திரம் என்ற சீரியலில் அவர் ருத்ரா என்ற போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் ஏசிபி கேரக்டரில் நடிக்கும் அவர் முக்கிய குற்றம் ஒன்றைக் கண்டுபிடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இது குறித்த வீடியோ சன் டிவியின் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது என்பதும் இந்த தகவலை அந்த வீடியோவில் கஸ்தூரியே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முதலாக நடிகை கஸ்தூரியை தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SunTV (@suntv)