திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2020 (09:55 IST)

பிக்பாஸ் வின்னர் இவர்தான்: விஜய் டிவி பிக்ஸ் செய்துவிட்டது: கஸ்தூரி

பிக்பாஸ் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் வாக்குகளின் அடிப்படையில் வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருவார் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவரான கஸ்தூரியிடம் நாமினேஷன் குறித்து ரசிகர் கேட்ட ஒரு கேள்விக்கு ’ஓட்டா காமெடி பண்ணாதீங்க என்றும் ஓட்டுகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவது என்றால் இந்த வாரம் அனிதாதான் வெளியேறி இருக்க வேண்டும் என்றும் சுசித்ராவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது என்றும் கூறியுள்ளார் 
 
மக்கள் போடும் ஓட்டை விஜய் டிவி நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை என்றும் அவர்கள் இஷ்டத்திற்கு தான் வெளியேற்றுவார்கள் என்றும் கஸ்தூரி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பிக் பாஸ் வின்னர் யார் என்பதையும் முதலிலேயே அவர்கள் முடிவு செய்து விடுவார்கள் என்றும்  விஜய் டிவியின் கம்பெனி ஆட்கள் தான் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் இறுதிப்போட்டிக்கு ஆரி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இருவரில் ஒருவர் இறுதிப்போட்டிக்கு வருவார் என்றும் மற்றும் ஒரு இளம் போட்டியாளரும் இறுதிப்போட்டிக்கு செல்வார் என்றும் இவர்கள் மூவரில் இருந்தும் விஜய் டிவியே ஒருவரை தேர்வு செய்யும் என்றும் வாக்குகளை அவர்கள் கொஞ்சம் கூட மதிப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்
 
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ஒருவரே விஜய் டிவியில் நடக்கும் ஓட்டு முறைகேடுகளை வெளிப்படையாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது