ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (15:25 IST)

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படத்தில் நடிகை காஷ்மீரா.. அதிகாரபூர்வ அறிவிப்பு!

hip hop
இசையமைப்பாளர் ஹிப்பாப் தமிழா ஹீரோவாக நடிக்கும் ஏழாவது படம் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இவர் அஜித்தின் ‘விஸ்வாசம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இந்த படத்தில் நடிகை காஷ்மீரா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அவரது கேரக்டர் இந்த படத்தின் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva