1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 12 நவம்பர் 2022 (15:47 IST)

ஹிப்ஹாப் ஆதி குரலில் உருவாகியுள்ள துணிவு படத்தின் பாடல்!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் பாடல்கள் பற்றிய அப்டேட்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணிகளான டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் ஆகியவை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு ப்ரோமோ பாடலை தற்போது சென்னையில் படமாக்கி வருகின்றனர். நடன இயக்குனர் கல்யாண், இந்த பாடலுக்கு நடனம் அமைக்கிறார். சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்த பாடலை படமாக்கி வருகின்றனர்.

இந்த பாடலை இசையமைப்பாளரும் பாடகருமான ஹிப் ஹாப் ஆதி பாடியுள்ளார். மேலும் இந்த பாடலின் ஆரம்ப வரிகள் “காசேதான் கடவுளட… அந்த கடவுள்தான் இப்ப படுத்துதப்பா” எனத் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.