1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (22:19 IST)

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்..

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

 
நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடித்த 2.0 படம் கிராபிக்ஸ் வேலை காரணமாக தாமதமாகி வருகிறது. அதேபோல், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படம் முடிவடைந்து விரைவில் வெளிவரவுள்ளது.
 
அதற்கிடையில் ரஜினிகாந்த் தற்போது அரசியல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ஒருபுறம், அடுத்த படத்திற்காக சில இயக்குனர்களிடம் கதை கேட்டிருந்தார். அதில், தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லீ, அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் ஆகிய மூவரும் அடக்கம்.
 
இறுதியில் ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜே இயக்குகிறார் என்பது தெரியவந்துள்ளது.
 
ஜிகர்தண்டா படத்தை பார்த்த ரஜினி, பாபி சிம்ஹா வேடத்தில் நானே நடித்திருப்பேன் என கார்த்திக் சுப்புராஜியிடம் கூறியிருந்தார். அதன் பின்னரே, ரஜினிக்காக கார்த்திக் சுப்புராஜ் ஒரு கதையை தயார் செய்தார். அது ரஜினிக்கு பிடித்துப் போக, தற்போது அவரே இயக்குகிறார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பது கூடுதல் தகவல்...