திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (12:57 IST)

பில்டிங் ஸ்டிராங் பண்ணிட்டுதான் வருவேன் - ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதன்பின் மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.   
 
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.
 
இந்நிலையில், அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள ரஜினிகாந்த் இன்று காலை சென்னை ராகவேந்திர திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
 
அரசியலுக்கு கட்டமைப்பு மிகவும் முக்கியம். குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமெனில் குடும்ப தலைவன் சரியாக இருக்க வேண்டும். தலைவனாக நான் சரியாக இருக்கிறேன். மாற்றவர்கள் சத்தம் போட்டல் போடட்டும். நான் பொறுமையாக இருப்போம். அனைத்து ரசிகர்களையும் சந்திக்க சில நாட்கள் ஆகும். அரசியலில் ஒவ்வொரு படியாக எடுத்து வைக்க வேண்டியது அவசியம். அடித்தளத்தை வலுவாக அமைக்க வேண்டும் என்பதால்தான் நாம் இந்த நிலையில்தான் இருக்கிறோம்.
 
தனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருபவர்களைத்தான் ரஜினிகாந்த்  ‘சத்தம்’ எனக் குறிப்பிடுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.