30 வருடங்கள் போதாதா? தமிழக முதல்வரிடம் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே
ஏழு பேரை விடுவிக்க கோரி தமிழக அமைச்சரவை ஏற்கனவே தீர்மானம் இயற்றி தமிழக கவர்னருக்கு அனுப்பி உள்ளது என்பதும் தமிழக கவர்னர் இது குறித்து பல ஆண்டுகளாக முடிவு எடுக்காமல் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்கூட உச்ச நீதிமன்றம் இது குறித்து கேள்வி எழுப்பியது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு குற்றத்திற்காக 30 ஆண்டு சிறையில் இருப்பது இது போதாதா என்றும் ஒரு தாய் தனது மகனை விடுவிக்க 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருவதாகவும் எனவே தமிழக முதல்வர் மற்றும் தமிழக கவர்னர் ஆகிய தயவுசெய்து பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
இந்த நேரத்திலாவது தாய் மற்றும் மகன் இருவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்கள் விரைவில் விடுவிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது