புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (19:58 IST)

நவரசா: கார்த்திக் நரேனின் ‘அக்னி’க்கு குவியும் வாழ்த்துக்கள்!

நவரசா: கார்த்திக் நரேனின் ‘அக்னி’க்கு குவியும் வாழ்த்துக்கள்!
மணி ரத்னம் தயாரிப்பில் தவராசா என்ற ஆந்தால்ஜி திரைப்படம் மதியம் 12 மணிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்தநிலையில் இதில் மொத்தம் ஒன்பது இயக்குனர்களின் பகுதிகள் வந்துள்ள நிலையில் அவற்றில் கார்த்திக் நரேன் இயக்கிய அக்னி என்ற பகுதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அரவிந்த்சாமி, பிரசன்னா, சாய் சித்தார்த், பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு ரான் எதான் யோஹன் இசையமைத்துள்ளார் 
 
விஞ்ஞானியான அரவிந்த்சாமி ஒரு வித்தியாசமான கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கிறார். அந்த கண்டுபிடிப்பை அவர் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட நிலையில் அதன் முக்கியமான டாக்குமெண்ட்களையும் அவரிடம் கொடுக்கிறார். அதன்பின்னர் கிளைமாக்ஸில் ஏற்படும் திருப்பம் தான் இந்த பகுதியில் கதை என்பது குறிப்பிடத்தக்கது
 
நவரசா ஆந்தாலஜியில் வெளியான ஒன்பது படங்களில் அதிக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது அக்னி தான் என்பது குறிப்பிடத்தக்கது