வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (17:23 IST)

புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நவரசா விளம்பரம்!

துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தின் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

9 விதமான உணர்ச்சிகளை வெளிக்காட்டும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப்தொடர் இன்று நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்தத் தொடரை மணிரத்னம் மற்றும் அவரின் நண்பர் ஜெயேந்திரா ஆகியோர் தயாரித்து உள்ளனர்.  இந்த படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் கொரோனா பாதிப்பால் வருவாயை இழந்த சினிமா தொழிலாளர்களுக்காக வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இன்று காலை துபாயின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில் இந்த ஆந்தாலஜின் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இது சம்மந்தமான வீடியோவை நெட்பிளிக்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது.