1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (09:02 IST)

“ரோலக்ஸ் சார் பயமுறுத்துகிறார்…” விக்ரம் பார்த்து நடிகர் கார்த்தி பகிர்ந்த வைரல் டிவீட்..

நடிகர் கார்த்தியின் விக்ரம் படம் தொடர்பான டிவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பதக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் உலகளவில் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படம் ரிலீஸாகிவிட்ட கிட்டதட்ட கைதி 2 என்று சொல்லுமளவுக்கே இரண்டு படங்களுக்கும் அதிகளவில் ஒற்றுமைகள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தியின் விக்ரம் படம் பற்றிய டிவீட் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “எல்லோரும் சொன்னது போல உண்மையான கொண்டாட்டம். ஆக்‌ஷன் காட்சிகளும் விஷ்வல் காட்சிகளும் பரபரப்பாகவும், சர்ப்ரைஸாகவும் உள்ளன. பஹத் பாசில் எப்போதும் நடிப்பின் தீவிரத்தை குறைய விடமாட்டார். வில்லன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி புதிய வண்ணத்தைக் கொடுத்துள்ளார். அனிருத் என்ன மாதிரியான பின்னணி இசையைக் கொடுத்துள்ளார். இறுதியாக ரோலக்ஸ் சார் மிகவும் பயமுறுத்துபவராக இருக்கிறார். லோகேஷ் நீங்கள் உங்ள் Fanboy எக்ஸைட்மெண்ட்டை ரசிகர்களுக்கும் கடத்தியுள்ளீர்கள்” என்று பாராட்டியுள்ளார்.