செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (15:32 IST)

மூன்றே நாளில் 100 கோடி வசூல்..! அதிரடி சாதனை செய்த விக்ரம்!

கமல்ஹாசன் நடித்து கடந்த 3ம் தேதி வெளியான விக்ரம் வார இறுதிக்கும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய ஹீரோக்கள் இணைந்து நடித்த படம் விக்ரம். இந்த படத்திற்கு ஆரம்பம் முதலே பரவலான எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகியது.

கடந்த 3ம் தேதி படம் ரிலீஸான நிலையில் ஆரம்பம் தொட்டே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தி, தெலுங்கு, தமிழ் என பேன் இந்தியா படமாக வெளியான விக்ரமின் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் விக்ரம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. உலக அளவில் ரூ.150 கோடியாக இதன் வசூல் நிலவரம் உள்ளது.