1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (18:35 IST)

லோகேஷ் கனகராஜுக்கு கட் அவுட்: சொந்த ஊரில் அன்பை வெளிப்படுத்திய ரசிகர்கள்!

lokesh cutout
லோகேஷ் கனகராஜுக்கு கட் அவுட்: சொந்த ஊரில் அன்பை வெளிப்படுத்திய ரசிகர்கள்!
விக்ரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்க்கு அவரது சொந்த ஊர் ரசிகர்கள் கட்அவுட் வைத்து அசத்தி உள்ள தகவல் வெளியாகியுள்ளது
 
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் விக்ரம்
 
இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி 150 கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய மூன்று படங்கள் ஹாட்ரிக் வெற்றி பெற்ற நிலையில் தற்போது விக்ரம் படமும் வெற்றி பெற்றுள்ளதால் தொடர்ச்சியாக நான்கு படங்கள் வெற்றி பெற்று உள்ளது 
 
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த அவரது ரசிகர்கள் முன்னணி நடிகர்களுக்கு இணையாக லோகேஷ் கனகராஜ்க்கு பிரமாண்டமான கட் அவுட் வைத்துள்ளனர்.