நெசவாளர்களுக்கு உதவிய கார்த்தி
நெசவாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், பருத்தி ஆடைகளை மட்டுமே அணிந்து நடித்துள்ளாராம் கார்த்தி.
வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், போஸ் வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். நேற்று வெளியான இந்தப் படம், எல்லோரையும் கவர்ந்திருக்கிறது. எல்லா பக்கங்களில் இருந்தும் பாஸிட்டிவான விமர்சனங்களே வருகின்றன. போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ள இந்தப் படம், ஒரு வழக்கை விசாரிக்க போலீஸ் எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதை விளக்குகிறது. இந்தப் படத்தில் கார்த்தி அணிந்து நடித்த ஆடைகள் எல்லாமே பருத்தியில் நெய்யப்பட்டதாம். நெசவாளர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பருத்தி ஆடைகளை மட்டுமே அணிந்து நடித்தாராம் கார்த்தி.