1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2017 (09:59 IST)

4 மில்லியன் ஃபாலோயர்களைத் தொட்ட சிவகார்த்திகேயன்

ட்விட்டரில், சிவகார்த்திகேயனை 4 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர்.

 
முன்பெல்லாம் பத்திரிகை, டிவி, ரேடியோ மூலம் மட்டுமே செய்திகளை மக்கள் அறிந்து கொள்வார்கள். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு, அதன்மூலம் எல்லாவற்றையும் அறிந்து கொள்கின்றனர். அதுவும் குறிப்பாக, சினிமாக்காரர்கள் ட்விட்டர் மூலமே எல்லாவற்றையும் அறிவிக்கின்றனர்.
 
அந்த ட்விட்டரில், 4 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு முன்பே சினிமாவில் பல வருடங்களாக இருக்கும் தனுஷ், சமீபத்தில் தான் 6 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றார். சினிமாவைப் போலவே  ட்விட்டரிலும் வேகமாக வளர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.